இதுவரை 5.48 லட்சம் பேருக்கு கொரோனா

virus
கொரோனா வைரஸ்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. தேசிய அளவில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் புதிதாக 5,493 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக 1,64.626 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 7,429 பேர் உயிரிழந்துள்ளனர்.

2-ம் இடத்தில் டெல்லி


கொரோனா வைரஸ் பாதிப்பில் டெல்லி 2-ம் இடத்தில் உள்ளது. அங்கு 83,077 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதுவரை 2,623 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 31,320 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,808 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தர பிரதேசத்தில் 22,147 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. 660 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 17,283, ராஜஸ்தானில் 17,271, மத்திய பிரதேசத்தில் 13,186, பிஹாரில் 9,212, காஷ்மீரில் 7,093 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிறப்பாக செயல்படும் கேரளா


கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் ஆரம்பம் முதலே கேரளா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனினும் கடந்த இரு வாரங்களாக அந்த மாநிலத்தில் வைரஸ் தொற்று 100-க்கும் அதிகமாக உள்ளது.

அங்கு நேற்று 121 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 78 பேர் வெளிநாடுகளில் இருந்தும் 26 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் கேரளாவுக்கு அண்மையில் திரும்பியுள்ளனர். கேரளாவில் இதுவரை 4,189 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2,150 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒரே நாளில் 19,459 பேருக்கு தொற்று


மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட புள்ளிவிவரத்தில், “நாடு முழுவதும் ஒரே நாளில் 19,459 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 5,48,318 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 16,475 ஆக உயர்ந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here