இந்தியாவில் கொரோனாவுக்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு

medicine
பாரத் பயோடெக் தயாரித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து.

கொரோனா வைரஸுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சீனா உட்பட உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு புதிய மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா நிறுவனம், பிரிட்டனை சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆகியவை கொரோனா வைரஸ் மருந்து ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளன.

பாரத் பயோடெக்


இந்தியாவை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட மருந்து நிறுவனங்கள் கொரோனா வைரஸுக்கு புதிய மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இதில் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கிருஷ்ணா கூறியதாவது:
கரோனா வைரஸ் காய்ச்சலை குணப்படுத்த கோவேக்ஸின் என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளோம். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைரலாஜி ஆய்வகத்துடன் இணைந்து புதிய மருந்தை உருவாக்கியுள்ளோம். ஆரம்ப கட்ட பரிசோதனைகள் முழு திருப்தி அளிக்கின்றன.

ஜூலையில் பரிசோதனை


இதைத் தொடர்ந்து வரும் ஜூலை மாதத்தில் மனிதர்களுக்கு மருந்தை அளித்து பரிசோதனை நடத்த மத்திய சுகாதாரத் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி 2 கட்டங்களாக மனிதர்களிடம் ஆய்வு நடத்தப்படும். இதில் வெற்றி கிடைத்தால் புதிய மருந்து சந்தையில் விற்பனைக்கு வரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here