கடந்த மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல் செய்யப்படுவதற்கு முன்பாக நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அதன்பிறகு பல்வேறு தருணங்களில் தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு பிரதமர் உரையாற்றியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமல் செய்யப்பட்ட ஊரடங்கில் இருந்து வெளியேறுவதற்கான வழிகாட்டு நெறிகள் கடந்த ஜூன் 1-ம் தேதி வெளியிடப்பட்டது. தற்போது இரண்டாம் கட்டமாக நேற்று புதிதாக வழிகாட்டு நெறிகள் வெளியிடப்பட்டன. இதில் மேலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கிழக்கு லடாக் எல்லைப் பிரச்சினையால் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் பதற்றம் எழுந்துள்ளது. சீனாவுக்கு பகிரங்கமாக சவால் விடுக்கும் வகையில் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு நேற்று தடை விதித்தது.
இந்த பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்று மாலை 4 மணிக்கு உரையாற்றுகிறார். அப்போது பல்வேறு முக்கிய முடிவுகளை அவர் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.