இருட்டில் கணவரின் சடலம்; அதிர்ச்சியில் மனைவி

சென்னை அம்பத்தூரில் மின்தடை ஏற்பட்ட போது கண்விழித்த மனைவிக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.

திருமணம்

சென்னை அம்பத்தூர், சூரப்பட்டு மதுரா மேட்டூர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் ராம்தாஸ் (30). எலெக்ட்ரிசீயன். இவருக்ககும் தமிழ்செல்விக்கும் (24).

கடந்த 2014-ம் ஆண்டு பெற்றோர் முன்னிலையில் வெகுசிறப்பாக திருமணம் நடந்தது.

இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒரு மகனுக்கு இரண்டரை வயதும் இன்னொரு மகனுக்கு ஒன்றரை வயதும் ஆகுகிறது.

சந்தோஷமாக ராம்தாஸ், தமிழ்செல்வி குடும்பம் நடத்திவந்தனர். ராம்தாஸின் குடும்பத்தினர் அதே பகுதியில் குடியிருந்து வந்தனர். இந்தசமயத்தில் ஊரடங்கு காரணமாக ராம்தாஸிக்கு வேலை இல்லை. அதனால் வீட்டிலேயே அவர் முடங்கிகிடந்தார். வேலை இல்லாததால் வருமானம் இல்லாமல் குடும்பம் தவித்தது.

இந்தச் சமயத்தில் ராம்தாஸ், தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவந்தார். வேலை இல்லாததால் முழுநேரமும் மதுபோதையில் திளைத்தார்.

வீட்டுக்கு சரியான நேரத்துக்கு வருவதில்லை. அதனால் குடும்பத்தில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்தநிலையில் கடந்த 27-ம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் மதுபோதையில் ராம்தாஸ் வீட்டுக்கு வந்தார். அப்போது மனைவி தமிழ்செல்வி, ஏன் எதற்கு இப்படி குடித்து உடம்பை கெடுத்துக் கொள்கிறீர்கள், நமக்கு 2 குழந்தைகள் உள்ளன.

நானும் உங்களை நம்பியிருக்கிறேன் என்று கூறியுள்ளார். அதனால் ராம்தாஸ், நான் அப்படிதான் குடிப்பேன் என்று வாக்குவாதம் செய்துள்ளார்.

மேலும் எனக்கு போதை இறங்கிவிட்டது. அதனால் மதுகுடிக்க பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதனால் இருவருக்கும் கடும் தகராறு நடந்தது.

இதையடுத்து தமிழ்செல்வி, கோபத்தில், குழந்தைகளுடன் பெட்ரூம்பிற்கு சென்று தூங்கச் சென்றுவிட்டார். ராம்தாஸ், வீட்டின் ஹாலில் போதையில் உளறிக்கொண்டிருந்தார்.

செல்போன் டார்ச்லைட்

இந்தநிலையில் அதிகாலை நேரத்தில் திடீரென அந்தப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டது. அதனால் கண்விழித்த தமிழ்செல்வி, வெளியில் வந்தார்.

செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் ஹாலுக்கு வந்த தமிழ்செல்வி ஹாலில் ஏதோ ஒன்று தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து பயந்து அலறினார். அதிகாலை நேரத்தில் மருமகளின் சத்தம் கேட்டு ராம்தாஸின் அப்பா திடுக்கிட்டார்.

உடனே அவர் குடும்பத்தோடு ராம்தாஸ் வீட்டுக்கு வந்தார். மின்சாரம் இல்லாததால் வீடே இருட்டாக இருந்தது. இதையடுத்து செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் ஹாலுக்குள் வந்தனர். அப்போது ராம்தாஸ் மின்விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.

தற்கொலை

அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அனைவரும் உடனடியாக ராம்தாஸை மீட்டு மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் ராம்தாஸ் வரும்வழியில் இறந்துவிட்டதாகக் கூறினர். இந்தத் தகவல் அம்பத்தூர் காவல் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ராம்தாஸின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேத பரிசோதனை முடிந்து ராம்தாஸின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மதுவுக்கு அடிமை

தமிழ்ச்செல்வியிடம் போலீசார் விசாரித்தபோது, நான் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளேன். என்னுடைய சொந்த ஊர் கரளபாக்கம். ராம்தாஸிக்கும் எனக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

என் கணவன் 9-வது வகுப்பு வரை படித்துவிட்டு எலெக்ட்ரிசீயனாக பணியாற்றி வந்தார். ஊரடங்கால் மதுவுக்கு அடிமையானார்.

கடந்த 27-ம் தேதி இரவு குடித்து விட்டு வீட்டுக்கு வந்த அவர், மதுவாங்க பணம் கேட்டு தகராறு செய்தார். பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறினார். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

ராம்தாஸின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்குப்பிறகு உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் அம்பத்தூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *