காகிதமில்லாத தமிழக பட்ஜெட்

தமிழக சட்டப்பேரவை விதிகள் குறித்து அதன் தலைவர் அப்பாவு தலைமையில் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
“தமிழக சட்டப்பேரவையில் காகிதமில்லாத இ-பட்ஜெட் தாக்கல் செய்ய முதல்வர் விரும்புகிறார். இதுகுறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த திட்டத்தை அனைவரும் ஏற்றுள்ளனர். நடப்பாண்டிலேயே இ-பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்படும்” என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *