கோவை, காஞ்சி கலெக்டர்களுக்கு கொரோனா

கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணிக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கோவையில் உள்ள கே.எம்.சி.எச். தனியர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரோடு தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா


காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவுக்கு சில நாட்களாக காய்ச்சல், இருமல் இருந்து வந்தது. அவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. அவர் காஞ்சிபுரத்தில் உள்ள முகாம் அலுவலகத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.


அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கலெக்டர்கள், போலீஸாருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு வருவதால் அரசுப் பணிகளில் தொய்வு ஏற்படுவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *