செல்போன் டவர் கட்டிடங்களுக்கு கூடுதல் வரி

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 1,739 கட்டிடங்களில் செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டிடங்களுக்கு அரையாண்டு சொத்து வரியாக ரூ.15,000 வசூல் செய்ய மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து கட்டிட உரிமையாளர்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், அனைத்து கட்டிடங்களுக்கும் சரிசமமாக ரூ.15,000 சொத்து வரி வசூலிக்கக்கூடாது. செல்போன் டவர்களுக்காக வசூலிக்கப்படும் வாடகை அடிப்படையில் சொத்து வரியை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதன்அடிப்படையில் செல்போன் டவர் கட்டிடங்களுக்கு கூடுதல் சொத்துவரியை வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. கொரோனாவால் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலையால் மாநகராட்சியின் வரி வருவாய் குறைந்துள்ளது. புதிய திட்டத்தால் மாநகராட்சியின் வருவாய் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *