சென்னை பெருநகருக்கு வெளியே அமைந்துள்ள பகுதிகளில் கட்டுமான திட்ட அனுமதியை நகர் மற்றும் ஊரமைப்புத் துறை (டிடிசிபி) வழங்குகிறது. இதன் நிர்வாக வசதிக்காக உள்ளூர் வளர்ச்சி குழுமங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாவட்ட அளவில் டிடிசிபி அலுவலகங்கள் செயல்படுகின்றன.
கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மாவட்ட டிடிசிபி அலுவலகங்களுக்கு வழங்கப்படவில்லை. கோப்புகளை சென்னைக்கு அனுப்பி இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. இதனால் காலதாமதம் ஏற்படுகிறது.
இதை கருத்தில் கொண்டு மாவட்ட டிடிசிபி அலுவலகங்களுக்கு அதிகார பகிர்வு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை வீட்டு வசதித் துறை ஆராய்ந்து வருகிறது. விரைவில் உரிய முடிவு எடுக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.