தனியாருக்கு ஆதார் விவரம் தரப்படவில்லை

தனியாருக்கு ஆதார் விவரம் தரப்படவில்லை என்று ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆதார் விவரங்கள் தனியாருக்கு அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) மறுத்துள்ளது. இதுகுறித்து யுஐடிஏஐ பெங்களூரு மண்டல துணைத் தலைமை இயக்குநர் கோபாலன் விளக்கம் அளித்துள்ளார்.

எங்களது அங்கீரிக்கப்பட்ட பயனீட்டு நிறுவனங்கள் தவிர வேறு எந்த நிறுவனத்துக்கும் ஆதார் விவரங்களை வழங்கவில்லை. இதுதொடர்பாக சமீபத்தில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை. தனிநபர் உரிமையை பாதுகாப்பதில் நாங்கள் மிகவும் உறுதியாக உள்ளோம் என்று கோபாலன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *