தமிழகத்தில் 4,231 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,231 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.


கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று 4 ஆயிரத்துக்குள் இருந்தது. இந்நிலையில் இன்று வைரஸ் பாதிப்பு மீண்டும் 4 ஆயிரத்தை தாண்டியது. மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 4,231 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.


தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 581 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 78,161 பேர் குணமடைந்துள்ளனர். 46,652 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.


மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,765 ஆக உயர்ந்திருக்கிறது.
மாவட்டவாரியாக சென்னையில் இன்று 1,216 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் 364, விருதுநகரில் 289, மதுரையில் 262, கள்ளக்குறிச்சியில் 254, தூத்துக்குடியில் 196, திருநெல்வேலியில் 110 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய குழுவினர் சென்னை வந்துள்ளனர். அவர் இன்று சென்னை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *