தம்பியை கொலை செய்த அண்ணன் சென்னை பெரம்பூரில் அதிர்ச்சியில் உறைந்த அம்மா

சென்னை எம்.கே.பிநகர் 19-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஸ்டெல்லா (57). இவருக்கு 3 மகள்கள், 4 மகன்கள். மகள்களும் மூத்த மகனும் வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டனர். ஸ்டெல்லாவின் கணவர் அகஸ்டின், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். கடைசி மகன் ஜேசுராஜ், 8 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். ஜான்சன் (35), ஜான் (32) ஆகியோருடன் ஸ்டெல்லா வசித்து வந்தார். ஜான்சனுக்கும் ஜானுக்கும் திருமணமாகவில்லை. மதுவுக்கு அடிமையான அண்ணனும் தம்பியும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுவந்தனர்.
கடந்த 28-ம் தேதி இரவு 9 மணியளவில், மது குடிக்க அம்மாவிடம் பணம் கேட்பது தொடர்பாக அண்ணன், தம்பி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கூர்மையான கம்பியை எடுத்த ஜான்சன், தம்பி ஜானின் வயிற்றில் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜானை, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ஜான் உயிரிழந்தார். இதுகுறித்து எம்.கே.பிநகர் போலீஸார் வழக்குபதிந்து தம்பியை கொலை செய்த குற்றத்துக்காக ஜான்சனை தேடிவருகின்றனர்.
ஒரு மகனை இழந்து, மற்றொரு மகனை போலீஸ் தேடுவதால் தாய் ஸ்டெல்லா அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here