நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டில் மலையாளத்தில் வெளியான லூசிபர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மாநில முதல்வரின் மறைவுக்குப் பிறகு அவரது மருமகனுக்கும் வளர்ப்பு மகனுக்கும் இடையே நடைபெறும் மோதல்தான் லூசிபர் படத்தின் மூலக் கதை.
இந்த திரைப்படத்தின் உரிமையை தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி நடிகர் ராம் சரண் வாங்கியுள்ளார். இதில் மோகன்லால் கதாபாத்திரத்தில் ராம் சரணின் தந்தையும் மெகா ஸ்டாருமான நடிகர் சீரஞ்சீவி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலையாள லூசிபர் திரைப்படத்தில் முதல்வரின் மகளாக மஞ்சு வாரியார் நடித்திருப்பார். இந்த கதாபாத்திரத்தில் நடிகை குஷ்பூ நடிப்பார் என்று கூறப்படுகிறது. தென்னிந்திய நடிகர்கள் மட்டுமன்றி பாலிவுட் பிரபலங்களையும் தெலுங்கு லூசிபர் திரைப்படத்தில் நடிக்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.