நடிகை பியாவின் அண்ணன் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.
டெல்லியை சேர்ந்த நடிகை பியா. பொய் சொல்ல போறோம். ஏகன், கோவா, பலே பாண்டியா, கோ, சட்டம் ஒரு இருட்டறை, நெருங்கி வா, முத்தமிடாதே என்பன உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
நடிகை பியாவின் அண்ணன் உத்தர பிரதேசத்தின் பரூக்காபாத்தில் வசித்து வந்தார். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
ஆனால் வென்டிலேட்டர் வசதியுடன்கூடிய படுக்கை அவருக்கு கிடைக்கவில்லை. இதுதொடர்பாக ;மூக வலைதளங்கள் மூலம் நடிகை பியா உதவி கோரினார். ஆனால் சில மணி நேரத்தில் பியாவின் அண்ணன் உயிரிழந்தார்.