மாநில வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரக கட்டுப்பாட்டின் கீழ் சென்னை சேப்பாக்கத்தில் மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது.
பருவமழை நிலவரங்களை கண்காணிக்க இந்த மையம் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. பருவமழை தொடர்பான பிரச்சினைகளை 1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.