கடந்த மார்ச் மாதம் தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 8 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர்.
தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டன. மதிப்பெண்கள் குறுஞ்செய்தி மூலம் மாணவ, மாணவியருக்கு அனுப்பப்பட்டன.
ஒட்டுமொத்தமாக 92.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் அதிகம்பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 94.80 சதவீதம் பேரும் மாணவர்கள் 89.41 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஈரோடு, கோவை அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.