தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதிய அறிவிப்பினை கடந்த திங்கள்கிழமை வெளியிட்டது.
“வீடுகள், கடைகள், ஆலைகள், மருத்துவமனைகள், பூங்காக்கள், தெரு விளக்குகள், கோயில்கள், பள்ளிகள், கல்லூரிகளில் ஒருமுனை, மும்முனை மின் இணைப்புகளில் ஆர்.சி.டி என்ற ரெசிடுயல் கரண்ட் டிவைஸ் என்ற உயிர் காக்கும் சாதனத்தை பொருத்த வேண்டும். மின் அதிர்ச்சியை தவிர்த்து மனித உயிர்களை காக்கும் வகையில் மின் கசிவை உணரும் திறந் 30 மில்லி ஆம்பியருக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
10 கிலோ வாட்டுக்கு மேல் மின் சாதனங்களை பொருத்தியிருக்கும் பேரங்காடிகள், வணிக வளாகங்கள்,மருத்துவ கூடங்கள், கிடங்குகள், பெரிய ஆலைகளில் 300 மில்லி ஆம்பியன் அளவுக்கான மின் கசிவை உணவரும் திறன் கொண்ட ஆர்சிடி சாதனத்தை பொருத்த வேண்டும்.
புதிதாக மின் இணைப்பு கோரும் அனைத்து விண்ணப்பதாரர்களும் மேற்கண்ட உயிர் காக்கும் சாதனத்தை நிறுவ வேண்டும். இல்லையெனில் மின் இணைப்பு வழங்கப்படும். மின் விபத்துகள், உயிரிழப்புகளை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.