கடந்த 1999-ம் ஆண்டில் திரையுலகில் கால் பதித்த நடிகை திரிஷா கிருஷ்ணன், கடந்த 21 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய திரையுலகில் கோலாச்சி வருகிறார். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.
ஊரடங்கு காலத்தின்போது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து திரிஷா ஒதுங்கினார். கடந்த 2 மாதங்களாக அவரை காண முடியாமல் ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருந்தனர்.
கடந்த 8-ம் தேதி அவர் இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் மீண்டும் துளிர்த்தார். அழகான, செல்லமான செல்பியை பதிவிட்டு ரசிகர்களின் மனதை குளிரச் செய்துள்ளார்.