ரேஷன் விற்பனையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்கள் நடத்தும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். திண்டுக்கல் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் சார்பில் 11 மையங்கள் வாயிலாக விண்ணப்பம் விநியோகிக்கப்படுகிறது. www.drbdindigul.net இணையம் வாயிலாகவும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திண்டுக்கல் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய முகவரிக்கு ஜூலை 7 பிற்பகல் 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும். முகவரி: கூட்டுறவு சங்கங்களின் திண்டுக்கல் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திண்டுக்கல் மாவட்டம்- 624 004.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here