1.55 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை தமிழக தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. மாநிலம் முழுவதும் வாக்குச்சாவடிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
வரும் தேர்தலில் 1.55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் 1.2 லட்சம் விவிபாட் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் இதுவரை ரூ.319 கோடி ரொக்கம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.