10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து டிசம்பரில் முடிவு

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து டிசம்பரில் முடிவு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்படுகின்றன. தனியார் பள்ளிகள் ஆன்லைன் வாயிலாக பாடங்களை நடத்தி வருகின்றன.

நடப்பு கல்வியாண்டில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுமா என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் நிருபர்கள் புதன்கிழமை கேள்வி எழுப்பினர். “பொதுத்தேர்வு குறித்து டிசம்பர் இறுதியில் முடிவு செய்யப்படும்” என்று அமைச்சர் பதில் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *