பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு 10 லட்சம் வரை இழப்பீடு என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் குழந்தைக்கு குறைந்தபட்ச இழப்பீடாக ரூ.4 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை வழங்கப்படும்.
மிகக் கடுமையான பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும்.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையும் மிகக் கடுமையான பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
ஆபாச பட விவகாரங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை இழப்பீடு கிடைக்கும்.
பாலியல் தாக்குதல்களில் உடல் உறுப்புகளை இழந்து 80 சதவீத ஊனமானால் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையும், 40 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை ஊனம் ஏற்பட்டால் ரூ.2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரையும், 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை ஊனம் ஏற்பட்டால் ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையும், 20 சதவீதத்துக்கும் குறைவாக ஊனம் ஏற்பட்டால் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையும் இழப்பீடு வழங்கப்படும்.
பாலியல் வன்கொடுமையால் கர்ப்பிணியானால் ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை இழப்பீடு கிடைக்கும்” என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.