சிங்கம் சிங்கிளா தூங்காது!

“பன்றிகள்தான் கூட்டமாக வரும். சிங்கம் சிங்கிளாதான் வரும்”. சிவாஜி படத்தில் நடிகர் ரஜினியின் இந்த டயலாக்குக்கு திரையரங்கமே அதிரும். உண்மையில், சிங்கம் சிங்களாக வராது. கூட்டமாக சுற்றும்.


ஆப்பிரிக்காவின் கென்யா நாட்டில் செரங்கெட்டி தேசிய பூங்கா உள்ளது. இங்கு சிங்கங்கள் அதிகமாக உள்ளன. இந்த பூங்காவுக்கு அண்மையில் சென்ற புகைப்பட நிபுணர் ஒருவர், ஒரே மரத்தில் 10 சிங்கங்கள் தூங்குவதை பார்த்தார். அதே அப்படியே கேமராவில் கிளிக் செய்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அந்த புகைப்பட நிபுணர் கூறும்போது, “பெரும்பாலும் சிறுத்தைகள் மரத்தில் ஏறி தூங்குவதை விரும்பும். சிங்கங்களின் உடல் எடை அதிகம் என்பதால் அவை மரத்தில் ஏறுவதை விரும்பாது. ஒரே மரத்தில் 10 சிங்கங்கள் தூங்கியது ஓர் அதிசய நிகழ்வு” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *