சென்னை ஐகோர்ட்டுக்கு 10 புதிய நீதிபதிகள்

சென்னை ஐகோர்ட்டுக்கு 10 புதிய நீதிபதிகள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

தமிழகத்தில் மாவட்ட நீதிபதிகளாக பணியாற்றும் சந்திரசேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்ரமணியன், கண்ணம்மாள் சண்முகசுந்தரம், சத்தியகுமாரி சுகுமார குரூப், முரளிசங்கர் குப்புராஜு, மஞ்சுளா ராமராஜு நல்லையா, தமிழ்செல்வி ஆகியோரை சென்னை ஐகோர்ட் நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இவர்களுக்கான நியமன உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பிக்க வேண்டும். ஜனாதிபதி உத்தரவிட்ட பிறகு இவர்கள் 10 பேரும் சென்னை ஐகோர்ட் நீதிபதிகளாக பதவியேற்பார்கள்.

சென்னை ஐகோர்ட்டில் தற்போது 54 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். புதிதாக 10 நீதிபதிகள் பதவியேற்கும்போது நீதிபதிகளின் எண்ணிக்கை 64 ஆக உயரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *