100 மணி நேரத்தில் 10 லட்சம் பேருக்கு கொரோனா

உலகளாவிய அளவில் 100 மணி நேரத்தில் 10 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.


உலகம் முழுவதும் இதுவரை 1.42 கோடி பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 84 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 6 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.


வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அந்த நாட்டில் 37 லட்சம் பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். ஒரு லட்சத்து 42 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.


இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசிலில் 20 லட்சம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 77 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.


சர்வதேச வைரஸ் பாதிப்பில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இதுவரை 10 லட்சத்து 38 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 26 ஆயிரத்து 273 பேர் உயிரிழந்துள்ளனர்.


ரஷ்யாவில் 7.65 லட்சம் பேர், பெருவில் 3.45 லட்சம் பேர், தென்ஆப்பிரிக்காவில் 3.37 லட்சம் பேர், மெக்ஸிகோவில் 3.31 லட்சம் பேர், சிலியில் 3.26 லட்சம் பேர், ஸ்பெயினில் 3 லட்சம் பேர், பிரிட்டனில் 2.93 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


முதல்முறையாக கடந்த 100 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 10 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. “இது அதிர்ச்சி அளிக்கிறது. வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *