பேட்டரி வாகனங்களுக்கு 100% வரிச் சலுகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனங்கள், கார்களுக்கு 50 சதவீத வரிச் சலுகை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த வரிச் சலுகை 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. வரும் 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை இந்த சலுகை அளிக்கப்படும்.
பேட்டரி வாகனங்களுக்கு சார்ஜ் செய்வதற்காக நெடுஞ்சாலைகள், சுங்கச்சாவடிகள் போன்ற இடங்களில் சார்ஜிங் மையங்கள் நிறுவப்பட உள்ளது. தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் 40 சதவீத வாகனங்கல் மின்சார வாகனங்களாக மாற வாய்ப்புள்ளது என்று அரசு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.