காஷ்மீரில் இருந்து 10,000 வீரர்கள் வாபஸ்

காஷ்மீரில் இருந்து 10,000 வீரர்கள் வாபஸ் பெறப்படுகின்றனர்.
கடந்த 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.

இதன்காரணமாக எழுந்த அசாதாரண சூழ்நிலையில் காஷ்மீரில் கூடுதல் பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது.
பாதுகாப்புப் படைகளின் என்கவுன்ட்டர்களால் தீவிரவாதிகளின் ஆதிக்கம் குறைந்து வருகிறது.

காஷ்மீரில் ஸ்ரீநகரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படை வீரர்கள்.
காஷ்மீரில் ஸ்ரீநகரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படை வீரர்கள்.

சில நாட்களுக்கு முன்பு காஷ்மீரின் கந்தர்பால், உதம்பூர் மாவட்டங்களில் 4ஜி இணைய சேவை தொடங்கப்பட்டது.

கடந்த 15-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின விழாவில் பேசியபோது, “ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் வளர்ச்சிக்கான பாதையில் அடியெடுத்து வைத்துள்ளன” என்று பெருமிதம் தெரிவித்தார்.

இந்த பின்னணியில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இருந்து 10 ஆயிரம் வீரர்களை வாபஸ் பெற மத்திய உள்துறை அமைச்சகம் இன்று உத்தரவிட்டது. இதன்படி மத்திய பாதுகாப்பு படைகளை சேர்ந்த 100 கம்பெனி படைகள் திரும்பப் பெறப்படுகின்றன.

காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சிஆர்பிஎப் வீரர்கள் நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகின்றன. அப்பகுதியை சேர்ந்த ஏழை பெண்ணுக்கு சிஆர்பிஎப் சார்பில் தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சிஆர்பிஎப் வீரர்கள் நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகின்றன. அப்பகுதியை சேர்ந்த ஏழை பெண்ணுக்கு சிஆர்பிஎப் சார்பில் தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

ஒவ்வொரு கம்பெனி படையிலும் 100 பேர் இடம்பெற்றுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் புதிய துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா அண்மையில் பதவியேற்றார்.

அவர் பதவியேற்ற பிறகு காஷ்மீரில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்காக நேற்று அவர் சிறப்பு குழுவை நியமித்தார்.

காஷ்மீர் எல்லையில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களையும் ஆயுதங்களையும் சீன ராணுவம் குவித்து வைத்துள்ளது. போர் பதற்றத்தை அவ்வப்போது பற்ற வைத்து கொண்டே இருக்கிறது.

லடாக் பகுதியில் பவுத்த மதத்தினர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அவர்கள் இந்தியாவின் மீது மிகுந்த தேசப்பற்று கொண்டவர்கள்.

பாகிஸ்தானின் சதியால் காஷ்மீரில் தீவிரவாத குழுக்கள் உருவாகி வருகின்றன. மக்கள் மத்தியில் தவறான தகவல்கள் பரப்பபடுகின்றன.

காஷ்மீரில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அந்த மாநில மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பி, வளர்ச்சி திட்டப் பணிகள் வேகமெடுத்துள்ளன. இதைத் தொடர்ந்து படைகள் வாபஸ் பெறப்படுகின்றன.

அதேநேரம் பாகிஸ்தானை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் சீனா, பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வாரி வழங்கி வருகிறது. மேலும் பாகிஸ்தானை அவ்வப்போது தூண்டிவிட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *