சென்னையில் 10,879 பேருக்கு கொரோனா சிகிச்சை

சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 91% பேர் குணமடைந்துவிட்டனர். அதாவது சனிக்கிழமை நிலவரப்படி 1,32,772 பேர் குணடைந்துள்ளனர். 10,879 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர்.

கோடம்பாக்கம், அண்ணாநகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், வளசரவாக்கத்தில் 900 பேரும், அம்பத்தூர், தேனாம்பேட்டை, அடையாறு பகுதிகளில் 800-க்கும் மேற்பட்டோரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இதுவரை 2,942 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *