10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் தொடங்கியுள்ளது.
எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி அக். 23 வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாணவ, மாணவியர் அவரவர் படித்த பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை அனைத்து பள்ளி நிர்வாகங்களும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். அனைவரும் முகக்கவசம், கையுறை அணிந்திருக்க வேண்டும். 6 அடி இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு 20 மாணவர்களுக்கு மட்டுமே சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.