பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.
காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும் வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் நிர்ணயிக்கப்பட்டன.
இதன்அடிப்படையில் கடந்த 10-ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில் தேர்வுத் துறை இயக்குநர் உஷா ராணி இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 21-ம் தேதி வரை 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகங்கள் சான்றிதழ்களை வழங்க வேண்டும்.
சான்றிதழில் பிழைகள் இருந்தால் தலைமை ஆசிரியரே திருத்தங்களை செய்து சான்றொப்பமிட்டு வழங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.