பத்தாம் வகுப்பு அசல் சான்றிதழ் அக். 23 முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளின் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சடிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. அந்தந்த மாவட்ட தேர்வு உதவி இயக்குநர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ் கட்டுகளை பெற்று அதன் வரிசை எண்கள் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இதன்பின் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் அக். 22-ம் தேதிக்குள் சான்றிதழ்களை விநியோகம் செய்ய வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியர்கள் அக். 23 முதல் அசல் சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்று தேர்வுத் துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.