தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கோபி அருகே கொடிவேரி அணையில் பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறந்துவிட்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
“10 வகுப்பு தனித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு தேதி விரைவில் அரிவிக்கப்படும். மாணவர்கள் தற்கொலை சம்பவம் நடைபெறக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தமிழக அரசின் சீரிய நடவடிக்கைகளால் இந்த ஆண்டு கூடுதலாக உணவு பொருள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது” என்று அமைச்சர் தெரிவித்தார்.