11 மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகளை நடப்பாண்டுக்குள் முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பணித் துறை சார்பில் நடந்து வரும் கட்டுமானப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அமைச்சர் வேலு தலைமை வகித்தார். கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா முன்னிலை வகித்தார்.
தமிழகம் முழுவதும் 11 இடங்களில் கட்டப்பட்டு வரும் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளின் கட்டுமானப் பணிகளை நடப்பாண்டுக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் வேலு உத்தரவிட்டார். கிண்டியில் கட்டப்பட உள்ள பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நினைவு நூலகம், எழுத்தாளர் ராஜநாராயணனுக்கு கோவில்பட்டியில் கட்டப்பட உள்ள நூலகத்துடன்கூடிய மணிமண்டபம் ஆகியவை குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.