11 இடங்களில் அவசர சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே மதுரை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கொடும்பாளூரில் மேம்படுத்தப்பட்ட அவசர சிகிச்சை மையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் சில நாட்களுக்கு முன்பு திறந்துவைத்தார்.
இதேபோல திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, வேலூர் மாவட்டம் மதனூர் உள்ளிட்ட 11 இடங்களில் அவசர சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இவை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.