சென்னையில் திருட்டை தடுக்க 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் தீபாவளியையொட்டி தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் புத்தாடைகள், பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதை பயன்படுத்தி திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் செயல்களும் அதிகரித்து வருகின்றன.
குற்றங்களை தடுக்க சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்பேரில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படை போலீஸார், தி.நகர் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.