உ.பி.யில் 13 வயது சிறுமி பலாத்காரம்.. கண்களை நோண்டி, நாக்கை அறுத்து கொடூர கொலை…

உத்தர பிரதேச மாநிலம், கெரி மாவட்டம், லக்கிம்பூரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அந்த மாநில தலைநகர் லக்னோவில் தங்கியிருந்தனர். கொரோனா வைரஸ் காரணமாக வேலையிழந்த குடும்ப தலைவர் தனது சொந்த கிராமத்துக்கு திரும்பினார்.

கடந்த வெள்ளிக்கிழமை காலை அந்த குடும்பத்தை சேர்ந்த 13 வயது சிறுமி இயற்கை உபாதையை கழிக்க வெளியே சென்றார். மதியம் வரை அவர் வீடு திரும்பாததால் தந்தை, குடும்பத்தினர் தேடி அலைந்தனர்.அப்போது அங்குள்ள கரும்பு வயலில் சிறுமி சடலமாக கிடந்தார்.

சிறுமி சடலம் மீட்கப்பட்ட இடத்தில் போலீஸார் விசாரணை நடத்தினர்.
சிறுமி சடலம் மீட்கப்பட்ட இடத்தில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

போலீஸார் வந்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.சிறுமியின் தந்தை கூறும்போது, எனது மகளை எல்லா இடங்களிலும் தேடி அலைந்தோம்.

கடைசியில் கரும்பு தோட்டத்தில் அவர் சடலமாக கிடந்தாள். அவளுடைய கண்கள் தோண்டப்பட்டிருந்தன. நாக்கு வெட்டப்பட்டிருந்தது. துப்பட்டா மூலம் கழுத்து நெரிக்கப்பட்டிருந்தது” என்று கண்ணீர் மல்க கூறினார்.

சிறுமியின் கொலை குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த போலீஸ் அதிகாரி.
சிறுமியின் கொலை குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த போலீஸ் அதிகாரி.

உத்தர பிரதேசத்தில் தற்போது முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தின் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்ளிட்டோர் சிறுமி கொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, சிறுமி கொலை தொடர்பாக 2 பேரை கைது செய்துள்ளோம். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

சிறுமியின் கண்கள் நோண்டப்பட்டு, நாக்கு வெட்டப்பட்டிருந்ததா என்று போலீஸாரிடம் கேட்டபோது மழுப்பலாக பதில் அளித்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *