கால்நடைகளுக்கு தேவையான பசுந் தீவனத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதன் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பசுந்தீவனம் அதிகமாகக் கிடைக்கும் காலங்களில் அவற்றை சேமித்துவைத்து வறண்ட காலத்தில் கால்நடைகளுக்கு வழங்குவதை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு ஊறுகாய் புல் தயாரிக்கும் அலகுகள் அமைக்க ரூ.1.17 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
பசுந்தீவன வங்கிகள் ஏற்படுத்தவும், கால்நடை நலம், நாட்டுக் கோழி இனப் பெருக்க பண்மை நிறுவுவதல் ஆகியவற்றுக்கும் ரூ.27.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கிராம அளவில் கறவை மாடு வளர்ப்போரின் இல்லத்துக்கே சென்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் திட்டத்துக்கு ரூ.14.28 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.