லஞ்ச வேட்டை.. ரூ.4 கோடி பணம்.. 519 பவுன் நகை சிக்கியது…

தமிழக அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட லஞ்ச வேட்டையில் ரூ.4 கோடி ரொக்க பணம், 519 பவுன் நகைகள் சிக்கின.

தீபாவளியை ஒட்டி அரசு அலுவலகங்களில் லஞ்ச பணம், பரிசு பொருட்கள் புழக்கம் அதிகமாக இருப்பது வழக்கம். இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் தமிவகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக பல்வேறு நகரங்களில் செயல்படும் சார்பதிவாளர் அலுவலகங்களில் விடிய விடிய சோதனை நடத்தப்பட்டது.

இதில் கட்டுக்கட்டாக பணம், நகைகள் சிக்கின. கடந்த சில நாட்களில் தமிழகத்தின் 54 அலுவலகங்கள் மற்றும் அரசு அலுவலர்களின் வீடுகளில் இருந்து ரூ.4.25 லட்சம் ரொக்க பணம், 519 பவுன் நகைகள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *