ரூ.10,000 கோடியில் தொழில் திட்டங்கள் தொடங்குவது தொடர்பாக தமிழக அரசுக்கும் நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், திருப்பூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.10 ஆயிரம் கோடியில் 14 புதிய தொழில் திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்தியாவிலேயே முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. இதுவரை ரூ.23 ஆயிரத்து 332 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது.
கொரோனா தொற்று காலத்திலும் தமிழகத்தில் முதலீடுகள் குவிகிறது. முதலீட்டாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.