அரசு மருத்துவமனைகளில் 2 ஆண்டு பணி கட்டாயம் என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
தமிழக மருத்துவக் கல்லூரிகளில் மேற்படிப்பை முடிக்கும் மாணவ, மாணவியர் அரசு மருத்துவமனைகளில் கண்டிப்பாக 2 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த தனி நீதிபதி, 2 ஆண்டுகள் பணி அவசியமில்லை என்று தீர்ப்பு வழங்கினார்.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு வழக்கை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி விசாரித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
“தமிழக மருத்துவக் கல்லூரிகளில் மேற்படிப்பை முடித்த பிறகு அரசு மருத்துவமனைகளில் 2 ஆண்டுகள் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனை செல்லும்.
அதேநேரம் அரசால் அவர்களுக்கு பணி வழங்க முடியாவிட்டால் மாணவ, மாணவியரின் சான்றிதழ்களை அரசு திரும்ப வழங்க வேண்டும்” என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.