பிப்ரவரியில் மெட்ரோவில் 20 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
கொரோனா ஊரடங்குக்கு பிறகு சென்னை மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அண்மையில் மெட்ரோ ரயில் கட்டணம் ரூ.20 வரை குறைக்கப்பட்டது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஊதிய பிரச்சினை தொடர்பாக போக்குவரத்து கழக தொழிலாளர்கள் அண்மையில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சென்னை மக்களுக்கு மெட்ரோ ரயில்களே கைகொடுத்தன. இதன்காரணமாக மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டுமே சென்னை மெட்ரோ ரயிலில் 20.54 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். கடந்த செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை 65.5 லட்சம் பயணிகள் மெட்ரோவை பயன்படுத்தியுள்ளனர்.