தமிழ் வழி பயின்றோருக்கு அரசு பணியில் 20% இடஒதுக்கீடு

தமிழ் வழி பயின்றோருக்கு அரசு பணியில் 20% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல் வழங்கியுள்ளது.

தி.மு.க ஆட்சியில் கடந்த 2010-ம் ஆண்டில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு அரசு பணிகளில் 20% முன்னுரிமை அளித்து சட்டம் இயற்றப்பட்டது.  அந்த சட்டத்தில் தமிழக அரசு சில திருத்தங்களை செய்தது. அதன்படி ஒன்றாம் வகுப்பிலிருந்தே முழுவதும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே 20 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு தகுதி பெற முடியும் என்று திருத்தப்பட்டது.

இதன் மூலம் ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு மட்டும் அரசு பணிகளில் இனி வரும் காலங்களில் 20 சதவீத இட ஒதுக்கீடு முறை பொருந்தும். தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் கேட்டு தமிழக ஆளுநருக்கு சட்டத் திருத்தம் அனுப்பி வைக்கப்பட்டது.

கடந்த 8 மாதங்களாக நிலுவையில் இருந்த இந்த மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *