ஆந்திராவில் 200 ஆசிரியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திராவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகள் வரை தொடங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கல்வித் துறை சார்பில் அனைத்து பள்ளிகளிலும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதில் 200 ஆசிரியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. 15 மாணவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று ஆந்திர அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.