சென்னையில் கூடுதல் பஸ்கள் இயக்கம்

சென்னையில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலையில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 2,300 மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. 

பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூடுதலாக 200 பஸ்களை இயக்க சென்னை போக்குவரத்து கழக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதேநேரம் பயணிகளின் வருகை குறைந்துள்ள வழித்தடங்களில் 9 பஸ்களின் சேவையை ரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *