மே 8, 9-ம் தேதிகளில் 24 மணி நேர பஸ் சேவை

தமிழகத்தில் இன்றும் நாளையும் (மே 8, 9-ம் தேதிகளில்)  24 மணி நேரமும் பஸ் சேவை இயக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் மே 10-ம் தேதி முதல் முழுஊரடங்கு அமல் செய்யப்படுகிறது. அப்போது பொது போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்படும். இதையொட்டி மக்களின் நலன் கருதி மே 8, 9-ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் தேவைக்கேற்ப பஸ்கள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

எனினும் கொரோனா விதிகளை பின்பற்றி பஸ்களில் 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று போக்குவரத்து கழகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *