26,909 சதுர அடி கட்டிடங்களுக்கு உள்ளூரிலேயே அனுமதி பெறலாம்

சென்னைக்கு வெளியில் உள்ள பகுதிகளில் 26,909 சதுர அடி வரையிலான தளபரப்பு உடைய கட்டிடங்களுக்கு உள்ளூர் அளவிலேயே ஒப்புதல் வழங்கலாம் என்று நகர், ஊரமைப்பு துறையான டிடிசிபி உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக டிடிசிபி இயக்குநர் சரவண வேல்ராஜ் விரிவான உத்தரவை வெளியிட்டுள்ளார்.
“அதிக உயரமில்லாத கட்டிடங்கள் வகையில் 26,909 சதுர அடி வரையிலான தளபரப்பு உள்ள கட்டிடங்களுக்கு கள அலுவலர் நிலையிலேயே ஒப்புதல் வழங்கலாம். இது 18.3 மீ்ட்டருக்கு மிகாத உயரம் உள்ள குடியிருப்பு, வணிக நிறுவன கட்டிடங்களுக்கு பொருந்தும்.
இதேபோல சிட்கோ, சிப்காட் தொழிற்பேட்டைகளில் உள்ள மனைகளில் 29,909 சதுர அடி வரையிலான தளபரப்பில் உள்ள 18.3 மீட்டர் உயர கட்டிடங்களுக்கு மாவட்ட அலுவலர்கள் ஒப்புதல் வழங்கலாம்.
நகர பகுதியில் 5 ஏக்கர் வரையும், ஊரக பகுதிகளில் 10 ஏக்கர் வரையிலான மனைப் பிரிவு திட்டங்களுக்கு தலைமையகத்தில் மட்டுமே ஒப்புதல் பெற முடியும்” என்று டிடிசிபி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *