அஜித் என்ற ஒற்றை சொல்லுக்கு ‘வலிமை’ அதிகம். அந்த வார்த்தையை சோஷியல் மீடியாவில் ஒருமுறை பதிவிட்டால் கோடிக்கணக்கான குரல்கள் ஓயாமல் எதிரொலித்து கொண்டே இருக்கும்.

நடிகர் அஜித் குமார் திரையுலகில் கால் பதித்து 28 ஆண்டுகளாகிறது. இந்த வெற்றியை அவரது ரசிகர்கள், சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட்டிங் செய்து கொண்டாடி வருகின்றனர். அவர் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களை ஆட்டம் காண வைத்து வருகின்றன.

வேதாளம் படத்தில் அவருக்கே உரித்தான ஸ்டைலில் ‘தெறிக்க விடலாமா’ என்று அஜித் உச்சரிக்கும் மந்திர சொல்லுக்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த மந்திர சொல், அஜித் ரசிகர்களுக்கு வேத வாக்காக மாறிவிட்டது.

சோஷியல் மீடியாவில் எதை செய்தாலும் அஜித் ரசிகர்கள் சும்மா தெறிக்க விடுகின்றனர். வெறும் அலையாக அல்ல, சுனாமியாக எழும்பி ஆர்ப்பரிக்கின்றனர்.

அஜித்தின் 28-வது ஆண்டு வெற்றிவிழாவையொட்டி அவரது பழைய, புதிய புகைப்படங்கள் சோஷியல் மீடியாவை தோரணமிட்டு அலங்கரித்து வருகின்றன.
தல..தல..தான் என்பதை நிரூபிக்கும் வகையில் அத்தனையிலும் அழகு மிளிர்கிறது. இள வயது அஜித் கொள்ளை அழகு. இப்போதைய அஜித் இயற்கை அழகு.