3.43 லட்சம் ஏக்கர் கோயில் நிலங்களின் ஆவணங்கள் ஆன்லைனில் வெளியீடு

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 36,000-க்கும் அதிகமான கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்கு 4,78,272 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதில் முதல்கட்டமாக 3,43,647 ஏக்கர் நிலங்களின் ஆவணங்கள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டு இந்து அறநிலையத் துறையின்  http://hrce.tn.gov.in இணையத்தில்வெளியிடப்பட்டுள்ளது.

இவற்றை பொதுமக்கள் பார்வையிடுவதுடன் பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம். கோயில் நிலங்கள் தொடர்பாக கருத்து அல்லது கோரிக்கைகள் இருந்தால் “கோரிக்கைகளை பதிவிடுக” என்ற பகுதியில் பதிவிடலாம் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *