ஒரே நாளில் 3.82 லட்சம் பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது.  சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு கடந்த டிசம்பர் 19-ம் தேதி வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  ஒரு கோடியை தாண்டியது.

கடந்த பிப்ரவரியில் கொரோனா வைரஸ் 2-வது அலை தொடங்கியது. தற்போது நாள்தோறும் 3.5 லட்சம் பேர் முதல் 4 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. மத்திய சுகாதாரத் துறையின் இன்றைய புள்ளிவிவரத்தின்படி நாடு முழுவதும் 3.82 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

ஒரே நாளில் 3.38 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 34.87 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 3,449 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 2,22,408 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் தினசரி தொற்று சற்று குறைந்து வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக கேரளா, டெல்லி, உத்தர பிரதேசம், கர்நாடகாவில் கொரோனா தொற்று ஏறுமுகமாக உள்ளது. இதில் உத்தர பிரதேசத்தின் நிலைமை மோசமாக உள்ளது.  

இதனிடையே ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா, சத்தீஸ்கரின் சில பகுதிகளில் ‘என்440கே’ என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் பரவும் கொரோனா வைரஸைவிட இது 15 மடங்கு ஆபத்தானது.  இந்த வைரஸ் பரவலை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *