செப்டம்பர் 1-ம்தேதி முதல் முதல்கட்டமாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சுமார் 16 மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கு வரும் மாணவர்கள் மிகுந்த மனஅழுத்தத்தில் இருக்கக்கூடும் என்பதால் அவர்களுக்கு தொடக்கத்திலேயே பாடத்திட்டங்களை நடத்த வேண்டாம் எனவும் அதற்கு பதிலாக அடிப்படை இணைப்பு பயிற்சி நடத்த வேண்டும் என்று பள்ளி- கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
சிறு வினாக்கள், ஒரு வரி வார்த்தைகள் போன்ற எளிய நடைமுறையில் பாடங்களை 3 வாரங்களுக்கு இணைப்பு பயிற்சிக்கான செயல்திட்டத்தை மாநில கல்வியியல் ஆராய்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. இதற்காக பள்ளி வேலை நாட்கள் மூன்றில் ஒன்றாக குறைக்கப்பட்டுள்ளது. 50 சதவீத மாணவர்கள் வகுப்புக்கு வருவதால் 40 நாட்கள் அடிப்படை பயிற்சி வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.