தமிழகத்தில் 3,700 பட்டாசு கடைகளை திறப்பதற்கு தமிழக தீயணைப்புத் துறை அனுமதி வழங்கியுள்ளது.
வரும் நவம்பர் 14-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியை ஒட்டி தற்காலிக பட்டாசு கடைகளை திறக்க தீயணைப்புத் துறை, உள்ளாட்சி நிர்வாகம், காவல் துறையிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் கட்டாயம் பெற வேண்டும். இதில் தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்றிதழ் முக்கியமானது.
இந்த ஆண்டு தீயணைப்புத் துறைக்கு 4,500 விண்ணப்பங்கள் வந்தன. இதில் 3,700 விண்ணப்பங்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன. சென்னையில் இதுவரை 132 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 15 பேருக்கு தடையில்லா சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.